Wednesday 12 September 2012

அம்மையார்குப்பம் கலவரம்: 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25, 2001,

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் மின் உற்பத்தி தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் திடீரென்று கலவரமாக மாறியதில்இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கலவரத்தின் போது கூடியிருந்த 2000 க்கும் மேற்பட்டோர் கொண்ட கூட்டத்தைப் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திக் கலைத்தனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்துப் போலீஸார் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் உள்ள மின் உற்பத்தித் தொழிற்சாலைகளில் மின் திருட்டு மற்றும் பல குற்றங்கள் நடக்கிறது என்று மின்உற்பத்தி ஆராய்ச்சிக் குழுவினருக்குப் புகார் வந்தது. இதையடுத்து ஆராய்ச்சிக் குழுவினர் சிலர் அமையார்குப்பத்தில் இயங்கி வரும் மின் உற்பத்தித்தொழிற்சாலைகளைகளில் விசாரணை நடத்த வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தித் தொழிலாளர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் திடீரென்றுகலவரமாக மாறியதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் ஜீப்பைக் கல் வீசித் தாக்கினர். இதில் 4 போலீஸ் ஜீப்புகள் சேதமடைந்தன.

இச்சம்பவத்தில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 9 போலீஸார் காயமடைந்தனர்.

மின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் அருணகிரி (45) என்பவர் கூட்டத்தில் சிக்கி மயக்கமடைந்து கீழே விழுந்தார். மயக்கமடைந்தநிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதையடுத்து இக்கும்பல் அம்மையார்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முன்பு கூடி அலுவலகத்தை தீ வைத்து எரிக்க முயன்றது. இதையடுத்துபோலீஸார் கண்ணீர்புகைக் குண்டு வீசியும், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தைக் கலைத்தனர்.

இதில் ரவி (18) என்பவர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

அமைதிக் கூட்டம்:

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபாகர், டிஐஜி ஜாபர், போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் நல்லசாமி ஆகியோர் கலவரம் நடந்தஅமையார் குப்பத்தில் அமைதிக் கூட்டம் நடத்தினர்.

விசாரணைக்கு உத்தரவு:

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சனிக்கிழமை இரவு உத்தரவிட்டது.

மேலும் உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்ரிடென்டன்ட் நல்லசிவத்துக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. மீது தாக்குதல்


அம்மையார்குப்பத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற எம்.ஜி.ஆர்.கழக பொதுச் செயலாளர் ஜகத் ரட்கனை ஒரு கும்பல் தாக்கியது. அவர் சென்ற கார் மீது கல்வீச்சுநடந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அவர் காயமடைந்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த எம்.பி.யும்,எம்.ஜி.ஆர்.கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜகத் ரட்சகனைக் கும்பல் ஒன்று தாக்கியது. இதில் அவரது கார்கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

அவர் லேசான காயமடைந்தார் என்றனர்.

முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மின் உற்பத்தித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்கலவரமாக மாறியது. இதையடுத்துப் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கூட்டஇடிபாடுகளில் சிக்கி ஒருவரும் பலியானார்கள். இச்சம்பவத்தில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றனர் .

No comments:

Post a Comment