Thursday 15 December 2011

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை

சென்னை : பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனரகம், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி, தேர்வுகள் வரும் மார்ச் 8ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கின்றன. இத்தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 பேர் எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத் துறை இயக்குனரகம், முழு வீச்சில் செய்து வருகிறது. மாணவர்களும், பொதுத் தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு தேர்வுகளுக்கும், தேர்வு மையங்களை அமைப்பதற்கான பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதற்கிடையே, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனரகம், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களில், 4 லட்சத்து 9 ஆயிரத்து 171 மாணவியர், 3 லட்சத்து 53 ஆயிரத்து 953 பேர் மாணவர்கள்.

கடந்த ஆண்டை விட, ஒரு வாரம் தாமதமாக தேர்வு துவக்கம் : பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்கி விடுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு கூட, அது போல தான் முடிவடைந்தது. ஆனால், வரக்கூடிய பொதுத்தேர்வு மட்டும், ஒரு வாரம் தாமதமாக துவங்கி, தேர்வு முழுவதும் ஒரு வாரம் தள்ளிப் போகிறது.



தேர்வறையில் மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்காக காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை 10 நிமிஷங்கள் கால அவகாசம் அளிக்கப்படும். விடைத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை, அதாவது 5 நிமிஷங்கள் அவகாசம் அளிக்கப்படும்

8-3-2012 (வியாழன்) மொழித் தாள்- 1

9-3-2012 (வெள்ளி) மொழித் தாள் - 2

12-3-2012 (திங்கள்) ஆங்கிலம் தாள் - 1

13-3-2012 (செவ்வாய்) ஆங்கிலம் தாள் - 2

16-3-2012 (வெள்ளி) இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

19-3-2012 (திங்கள்) கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டசத்து, உணவு ஆலோசனை

20-3-2012 (செவ்வாய்) வணிகவியல், மனையியல், புவியியல்

22-3-2012 (வியாழன்) வேதியியல், கணக்குப் பதிவியல், சுருக்கெழுத்து

26-3-2012 (திங்கள்) உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வணிகக் கணிதம்

28-3-2012 (புதன்) தொடர்பு ஆங்கிலம், இந்தியக் கலாசாரம், கம்ப்யூட்டர் அறிவியல், உயிரி வேதியியல், கூடுதல் மொழிப் பாடம், தட்டச்சு

30-3-2012 (வெள்ளி) அனைத்துத் தொழில்பிரிவு பாடம், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது),புள்ளியியல்

No comments:

Post a Comment