Sunday 18 December 2011

அரையாண்டுத் தேர்வு வினாத்தாள், "அவுட்'

இடைப்பாடி : இடைப்பாடி அருகே அரையாண்டுத் தேர்வு வினாத்தாள், "அவுட்' ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தற்போது, அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்த தேர்வில், ஒன்பதாம் வகுப்புக்கு, தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் ஆகிய தேர்வுகள் நடந்து முடிந்தது.

இன்று (திங்கட்கிழமை), ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடக்க இருந்தது. இந்நிலையில், இடைப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியில், ஒன்பதாம் வகுப்புக்கான ஆங்கிலம் இரண்டாம் தாள் வினாத்தாளை, மாணவர்கள் பலர், ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தியதில், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வினாத் தாள்கள் இருப்பு வைக்கப்பட்டு, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 12 பள்ளிகளுக்கு, தேர்வு நாள் அன்று அனுப்புவது வழக்கம். வினாத்தாள் அனுப்பி வைக்கும் பொறுப்பை, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தாமரைச் செல்வி கவனித்து வருகிறார். இவரது கவனக்குறைவால், கடந்த சனிக்கிழமை நடந்த தேர்வுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாளுடன், திங்கட்கிழமை (இன்று) நடக்கும் ஆங்கிலம் இரண்டாம் தாள் வினாத்தாளையும் சேர்த்து அனுப்பியுள்ளார்.

இதை, செட்டிமாங்குறிச்சி மேல்நிலைப் பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஆசிரியர்களும் கவனிக்காமல், கடந்த சனிக்கிழமை நடந்த தேர்வின் போது, இன்று (திங்கள்கிழமை)நடக்க வேண்டிய, ஆங்கிலம் இரண்டாம் தாள் வினாத்தாளை, மாணவர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர். ஆங்கிலம் இரண்டாம் தாள் வினாத்தாளை பெற்ற மாணவர்கள், "இது, திங்கட்கிழமை நடக்கும் தேர்வுக்கான வினாத்தாள்' எனக் கூறியுள்ளனர். அதையடுத்து, வினாத்தாளை திரும்ப பெற்றுக் கொண்டு, முதல் தாள் வினாத்தாளை வழங்கியுள்ளனர்.

இதில், இரண்டு மாணவர்கள், வினாத்தாளை திருப்பிக் கொடுக்காமல், ஜெராக்ஸ் எடுத்து, மற்ற மாணவர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர். இந்த ஜெராக்ஸ், செட்டிமாங்குறிச்சி மட்டுமல்லாது, அப்பகுதியைச் சேர்ந்த மற்ற பள்ளி மாணவர்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது. இதையறிந்த மாவட்ட கல்வி நிர்வாகம், இன்று நடக்க இருந்த ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment