Thursday, 15 December 2011

ஓவிய ஆசிரியர்களுக்கு 21 மையங்களில் பயிற்சி

விருதுநகர் : தமிழகப் பள்ளிகளில் உள்ள ஓவிய ஆசிரியர்கள் அனைவருக்கும், 21 மையங்களில், சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில், வரும் 19 முதல் 23ம் தேதி வரை, பள்ளிகளில் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில், 21 மையங்களில், 2,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில், ஓவிய ஆசிரியர்களுக்கு, ஓவியப் பாடவேளையில், மாணவர்களிடமிருந்து தனித்திறன் அறிய, தெரிந்த வகை ஓவியங்களை வரையச் செய்தல், ஓவியம், கலை என்பதை, மாணவர்களை உணர வைத்து, ஓவியத்தில் ஆர்வம் ஏற்படுத்துதல் போன்ற வகைகளில், பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மேலும், மரபு வழி ஓவியம் முதல் மாடர்ன் ஆர்ட் வரை தெரிந்து கொள்ளுதல், சாக்பீஸ் சிற்பங்கள், காய்கறிகளில் சிற்பங்கள் அமைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை போன்ற கருத்துக்களை மையமாக்கி, மாணவர்கள், ஓவியங்களாக வரைய ஆர்வத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment